பஞ்சாப் ஜூலை, 19
சிபிஐ தனது அதிகார வரம்பில் விசாரணையை தொடங்குவதற்கு முன் மாநில அரசிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. டெல்லி சிறப்பு காவல் சட்டத்தின் ஆறாவது பிரிவின்படி மாநில அரசின் ஒப்புதலை பெறுவது அவசியமாகிறது. தற்போது தமிழ்நாடு, மேற்கு வங்காளம், பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களில் சிபிஐ அனுமதி பெற்ற பிறகு மாநிலங்களில் விசாரணை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.