ஜம்மு ஜூலை, 18
ஜம்முவில் தீவிரவாதம் குறைந்துள்ளதாக கூறுவது முற்றிலும் தவறானது என அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்முவில் கடந்த ஒரு வருடமாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி அரசு இங்கு நடைபெறும் கொலைகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விமர்சித்துள்ளார். அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.