பாரிஸ் ஜூலை, 17
33வது ஒலிம்பிக் திருவிழா வரும் 26ம் தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அந்நாட்டில் சுமார் 400 நகரங்களில் ஒலிம்பிக்ஸ் ஜோதி ஓட்டம் நடைபெறுகிறது. அதில் ஒருவராக ஈழத்தமிழரான தர்ஷன் செல்வராஜா இந்த வாய்ப்பை பெற்றார். தொழில் முறை செஃப்பான அவர் சிறந்த உருவாக்க போட்டியில் முதலிடம் பிடித்ததற்காக கௌரவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.