புதுடெல்லி ஜூலை, 10
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் முதன்மை ஆலோசராக டாக்டர் சௌமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலன் அடிப்படையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. காச நோயை வேரறுக்க உதவும் ஆராய்ச்சி குறித்த ஆலோசனையை வழங்குவதிலும், சர்வதேச மருத்துவ நிபுணர் குழுக்களை அமைப்பதிலும் அவர் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.