கள்ளக்குறிச்சி ஜூலை, 4
கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதேஷை சிபிசிஐடி காவல்துறை விசாரித்த போது அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. பண்ருட்டி அருகே உள்ள இயங்காத பெட்ரோல் பங்கின் கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கி வைத்திருந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து நேரில் சென்று விசாரித்த காவல்துறையினர் அந்த பெட்ரோல் பங்கிற்கு சீல் வைத்தனர்.