கீழக்கரை ஜூலை, 3
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் மீன் மார்க்கெட், கடைகள் என அனைத்தும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அவைகளை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்படுவதாக நகராட்சி நிர்வாகம் கூறியது.
இதனால் வியாபாரிகள் தங்களின் கடைகளை காலி செய்து வேறொரு பகுதிக்கு சென்றனர். கடைகள் காலி செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்படாமலும் அந்த பகுதி கடும் இருள் சூழ்ந்ததாகவும் காணப்படுகிறது.
இதனால் இந்த பகுதிகளை இரவு நேரத்தில் சமூக விரோதிகள் தங்களுக்கான திறந்தவெளி பார் ஆக பயன்படுத்தி வருகின்றனர். பழைய கட்டிடங்களை இடித்து விட்டால் ஓரளவேனும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தி விடலாம்?
கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மந்தகதியில் செயல்படாமல் துரிதகதியில் செயல்பட வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்