ராமநாதபுரம் ஜூலை, 3
தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சேர்த்து சிறப்பு சிறப்பு முகாம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மீனவ கிராமங்களில் ஜூலை 8 முதல் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி அதனை சார்ந்த தொழிலாளர்கள், மீனவர் மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர் அனைவரும் மீனவர் நல வாரிய உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.