புதுடெல்லி ஜூன், 30
நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டணம் அதிகமாக இருப்பதால் ஏழை எளிய மக்கள் பயணிக்க முடியாத நிலையே உள்ளது. இந்நிலையில் அனைத்து மக்களும் பயணிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் கட்டணத்தை குறைக்க உள்ளதாக மத்திய ரயில்வே இணைய அமைச்சர் சோமன்னா கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்