புதுடெல்லி ஜூன், 30
இந்திய ராணுவ தளபதியாக உபேந்திர திவேதி நாளை பதவியேற்கிறார். கடற்படை தளபதியாக தினேஷ் திரிபாதி பதவி வகிக்கிறார். இவர்கள் இரண்டு பேரும் மத்திய பிரதேசத்தில் உள்ள சைனிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்றாக படித்தவர்கள். இதேபோல ரோல் நம்பர் வரிசையில் 931, 938 என அமைந்துள்ளது. இந்திய பாதுகாப்பு துறை வரலாற்றில் ஒரே வகுப்பு நண்பர்கள் தளபதிகளாக ஒரே நேரத்தில் பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும்.