சென்னை ஜூலை, 27
மக்கள் நீதி மையம் மாநில செயலாளர் சிவ இளங்கோ அக்கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விளங்குவதாக அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தில் இணைவதற்கு முன்பு தகவல் பெறும் உரிமைச் சட்டம், கிராம சபை உள்ளிட்டவை குறித்து கட்சியினருக்கு பயிற்சி அளித்தது போல தாங்கள் கேட்டுக் கொண்டால், தொடர்ந்து அது போன்ற பயிற்சிகளை வழங்க தயாராக உள்ளதாகவும் அவரது விலகல் கடிதத்தின் குறிப்பிட்டுள்ளார்.