தர்மபுரி ஆக, 29
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பைசுஅள்ளி ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு சுகாதார பணி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் விஜயா, ஒன்றிய கவுன்சிலர் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சுகாதார பணியை தொடங்கி வைத்தனர்.
இதேபோல் பெரியாம்பட்டி ஊராட்சியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தலைவர் ஜெயலட்சுமி சங்கர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதில் துணைத்தலைவர் கல்பனா, ஊராட்சி செயலாளர் முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.