கள்ளக்குறிச்சி ஜூன், 23
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கவலைக்கிடமாக இருந்த பலரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 33 பேரும், சேலம் மருத்துவமனையில் 17 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்தனர்.