சென்னை ஜூன், 20
ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனையில் ஓபிஎஸ் ஆதரவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஓபிஎஸ் அணியில் இருந்து ஜே சி டி பிரபாகர், புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் விலகிய நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.