சென்னை ஜூன், 20
தமிழக சட்டப்பேரவை கூட்டத்துடன் இன்று காலை கூடுகிறது. 2024 ம் ஆண்டில் முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக கூடும் இந்த கூட்டத்தில், நீர்வளம், உயர்கல்வி, நெடுஞ்சாலை, காவல்துறை மீதான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற உள்ளன. ஜூன் 29 இல் முதல்வர் ஸ்டாலின் உரையுடன் கூட்டத்தொடர் நிறைவடைகிறது