சென்னை ஜூன், 15
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தம் 5 லட்சத்து 54 ஆயிரத்து 598 வாக்குகள் மாயமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ‘The Quint’ இணைய ஊடகம் நடத்திய ஆய்வுகள் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதேபோல 176 தொகுதிகளில் பதிவான வாக்குகளை விட 35 ஆயிரத்து 93 வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டிருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.