புதுடில்லி ஜூன், 12
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 5 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். மோடியை தவிர்த்து அமைச்சரவையில் 71 பேர் உள்ளனர்.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில், 71 அமைச்சர்களில் 70 பேர் சராசரியாக 107.94 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ளனர். ஊரக வளர்ச்சி துறை இணை அமைச்சர் சந்திர சேகர் பெம்மாசானி, 5705.47 கோடி ரூபாய் சொத்துகளுடன்முதலிடத்தில் உள்ளார்.
47 பேர் 51 – 70 வயதுக்குப்பட்டவர்கள். 31 – 50 வயதுக்குட்பட்ட 17 அமைச்சர்கள் அமைச்சரவையில் உள்ளனர்.28 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 19 பேர் மீது, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வெறுப்பு பேச்சு போன்ற கடுமையான வழக்குகள் உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.