ஒடிசா ஜூன், 11
ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. இதை எடுத்து பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 4:30 மணிக்கு மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ராஜ்நாத் சிங் முன்னிலையில் நடக்கும் இக்கூட்டத்தில் ஒடிசா முதல்வர் தேர்வு செய்யப்பட உள்ளார். அந்த பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் அடிபடுகிறது. இந்நிலையில் நாளை மாலை 5 மணிக்கு புதிய அரசு பதவியேற்க உள்ளது.