சென்னை ஜூன், 1
தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின்சார பயன்பாட்டு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியான தகவல்களுக்கு மின்வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போது வெளியான செய்தித்தாள் நகல் தற்போது தவறாக பரப்பப்படுகிறது எனவும், இந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தும் திட்டம் இல்லை எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.