புதுடெல்லி ஜூன், 9
நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக உள்ள மோடி அதில் முழுமையான வெற்றி அடைவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பதவியேற்புக்கு முன்பே அக்னிவீர் திட்டம் ரத்து, சிறப்பு அந்தஸ்து, நீட் விலக்கு என கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. கூட்டணி ஆட்சியும் மோடிக்கு புதிய அனுபவமாக இருக்கும் நிலையில் அதை சமாளித்து ஐந்து வருட ஆட்சியை நிறைவு செய்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.