கீழக்கரை ஜூன், 4
நடந்து முடிந்துள்ள 18 வது இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.இதில் ஆளும் பாஜக கூட்டணி 293 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 233 இடங்களிலும் வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றன.
பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையுடன் 240 இடங்களிலும் காங்கிரஸ் 100 இடங்களிலும் வெற்றி பெறும் நிலையில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டுமென்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாகும்.
கடந்த பத்தாண்டு கால மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பொதுமக்கள்,வியாபாரிகள்,லாரி ஓட்டுனர்கள் என பல்வேறு தரப்பு மக்களும் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வந்தனர்.
டோல்கேட் வரி,சாலை வரி, GST வரி, கல்வி வரி,உணவு வரி என எதையெடுத்தாலும் வரி வரி என வசூலித்து மக்களை கடன்காரர்களாக மாற்றிய பாஜக ஆட்சியை வடமாநிலத்தவர்களே வெறுக்கும் அளவுக்கு இன்றைய தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
மக்களின் ஆட்சி மாற்ற எதிர்பார்ப்புக்கு இணங்க தெலுங்குதேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் இண்டியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த ஜனதா தளம் நிதீஷ்குமாரும் தங்களின் பாஜக ஆதரவு போக்கினை கைவிட்டு காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.
18 வது பாராளுமன்ற ஆட்சி அதிகாரத்தை மக்கள் கூட்டணியான இண்டியா கூட்டணியே தீர்மானிக்கும் என்பது 99.99% மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இது நடந்தால்….. இந்தியாவுக்கு பொற்காலம்.காத்திருப்போம் காலம் பதில் சொல்லட்டும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்