நாமக்கல் மே, 29
நாமக்கல் கோழி பண்ணைகளில் முட்டை விலை குறைந்ததால் அதன் தாக்கம் சில்லறை விலையிலும் எதிரொலித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த முட்டை விலை தற்போது சரிவை சந்தித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு மொத்த விலையில் 5 ரூபாய் 80 காசுகளாக இருந்த ஒரு முட்டை விலை தற்போது 5 ரூபாய் 20 காசுகளாக குறைந்துள்ளது. இதன் காரணமாக வீட்டு செலவு குறையும் என இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.