புதுடெல்லி மே, 24
மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பேசும் பிரதமர் மோடி ராஜநாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் எனக் கூறுகின்றனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சீன ஆக்கிரமிப்பு பகுதியை மீட்போம் என பேசி வருகிறார். இதுபோல் தேர்தல் பிரச்சாரத்தில் வழக்கத்தை விட இந்த முறை பாகிஸ்தான், சீனா குறித்தும், தேசியவாதம் குறித்தும் தலைவர்கள் பேசி வருகின்றனர்.