ராமநாதபுரம் மே, 23
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் வைகாசி பிரமோற்சவ விழாவிற்கு நேற்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வருகை புரிந்தார். சுவாமி தரிசனம் செய்த அவருக்கு எமனேஸ்வரம் சௌராஷ்டிரா சபையினர் சார்பாக வரதராஜ பெருமாள் உருவம் பொறிக்கப்பட்ட படம் அன்பளிப்பாக வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.