சென்னை மே, 20
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பத்திற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தமிழக முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்படும். எனவே விருப்பமுள்ள மாணவர்களின் பெற்றோர் TNSchools இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.