கீழக்கரை மே, 18
கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
இம்முகாமில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். ஃப்ளையர் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு மேலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் ஐசோநாக்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் பூவிதா ஆகியோர் கலந்துகொண்டு கல்லூரியில் தங்கள் நிறுவனத்திற்கு மாணவர்களை தேர்வு செய்தனர்.
இம்முகாமில் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜசேகர், எங்களது கல்லூரியில் இதுவரை மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உள்ள மாணவர்கள் பல நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உத்தரவு பெற்றுள்ளனர் அவர்கள் ஆண்டு இறுதித் தேர்வு முடிந்தவுடன் தங்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவு வழங்கிய நிறுவனங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
பணி உத்தரவு இன்னும் பெறாத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி பல நிறுவனங்களை தொடர்பு கொண்டு பணி அமர்த்தும் முயற்சியை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் விக்னேஷ் குமார் செய்து வருகிறார் இம்முகாமிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் விக்னேஷ் குமார் மற்றும் முனைவர் முகேஷ் குமார் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
ஜஹாங்கீர் அரூஸி/மாவட்ட நிருபர்