புதுடெல்லி மே, 19
உலகளாவிய பொருளாதார சூழல்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 64 ஆயிரத்து 415 கோடி டாலராக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மே 10 ம் தேதி கணக்கீட்டின்படி, தங்கம் கையிருப்பு 107.2 கோடி டாலராக அதிகரித்து, 5,595 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைதல் உரிமையை பொருத்தமட்டில், 50 லட்சம் டாலர் உயர்ந்து, 1,806 கோடி டாலராக உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.