சென்னை மே, 18
தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இணைந்து படிப்பதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விண்ணப்ப பதிவு தொடங்கிய 12 நாட்களில் இதுவரை 2 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.