சென்னை மே, 13
பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி தமிழக பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இதுவரை சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 6ம் தேதி தொடங்கியுள்ளது.