புது டெல்லி மே, 11
ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்துகிறார். உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த அவர் இன்று முதல் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட உள்ளார். இதனால் தற்போதைய அரசியல் நிலவரம், தேர்தல் பிரச்சார உத்திகள், பாரதிய ஜனதாவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.