திருச்சி ஆக, 27
அதிமுக மாநில இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவபதி இல்ல திருமண விழா நாளை மறுநாள் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
முன்னதாக இந்த திருமண வரவேற்பு விழா நாளை மாலை அதே மண்டபத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருமண விழாவில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் நாளை காலை திருச்சி வருகிறார்.