சென்னை மே, 9
தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் கீழ் அரசு பள்ளியில் ஆறு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு 1000 ரூபாய் வழங்க உள்ளது. இந்த தொகையை பெற 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் கலை மற்றும் அறிவியல் போன்ற உயர் கல்வி படிப்புகளில் சேர வேண்டும். இதையடுத்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்தகம், பொது அறிவு நூல்கள் போன்றவற்றை வாங்க தமிழக அரசு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்க உள்ளது.