விருதுநகர் மே, 9
தமிழ்நாட்டில் மே 11-ம் தேதி வரை விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.