சென்னை மே, 4
இரண்டு கைகளையும் இழந்த இளைஞர் முதல் முறையாக கார் ஓட்டுவதற்காக ஓட்டுநர் உரிமம் பெற்று சாதனை படைத்துள்ளார். சென்னையை சேர்ந்த தான்சன் விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த போதும் தளராமல் கார் ஓட்டுவதற்கு கற்றுக்கொண்டார். ஆனால் உரிமம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் மருத்துவர்கள் வழிகாட்டுதலின்படி அவரது கார் வடிவமைப்பில் சில மாற்றம் செய்து கால்கள் மூலம் கார் ஓட்டியதால் அவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.