புதுடெல்லி ஏப்ரல், 27
ஐபிஎல் தொடரில் இன்றைய 43வது லீக் போட்டியில் டெல்லி அணியை மும்பை அணி எதிர்கொள்கிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று மாலை 3:30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெருமுனைப்பில் இருப்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐபிஎல் தொடரில் இதுவரை இவ்விரு அணிகளும் 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டெல்லி அணி 15 முறையும் மும்பை அணி 19 முறையும் வெற்றி பெற்றுள்ளன.