கேரளா ஏப்ரல், 26
மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடந்து முடிந்தது. தொடர்ந்து இன்று இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் கேரளா 20, கர்நாடகா 14, ராஜஸ்தான் 13, மகாராஷ்டிரா 8, உத்திரபிரதேசம் 8, மத்திய பிரதேசம் 6, பீஹார் 5, அசாம் 5, மேற்குவங்கம் 3, சத்தீஸ்கர் 3, காஷ்மீர் 1, மணிப்பூர் 1, திரிபுரா 1 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.