குஜராத் ஏப்ரல், 24
மக்களவை தேர்தலில் மூன்றாம் கட்டமாக குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு மே 7ல் நடைபெற உள்ளது. 96 இடங்களுக்கு போட்டியிட 2,963 பேர் மனு செய்திருந்தனர். மீட்பு மனு பரிசீலனைக்கு பின்பு 1,563 மனுக்கள் தகுதி ஆனதாக ஏற்கப்பட்டது. நேற்றுடன் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிந்த நிலையில் 1351 பேர் கொண்ட இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.