Spread the love

நெல்லை ஆக, 27

போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சாலைகளில் காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக போக்குவரத்து பாதுகாவலர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இதில் தன்னார்வலர்கள், பொறியாளர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் ஆர்வமுடன் பணியாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் தூத்துக்குடியை சேர்ந்த ஜூட்சன் என்பவர் பல ஆண்டுகளாக போக்குவரத்து பாதுகாவலர் அமைப்பில் இணைந்து பள்ளி மாணவர்களை கொண்டு போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அமைப்பில் அவருக்கு தலைமை பாதுகாவலர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜூட்சன் குழுவினர் இன்று நெல்லையை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து சீரமைப்பு குறித்த பயிற்சி அளிப்பதற்காக நெல்லை வந்திருந்தனர். அவர்கள் நெல்லை மாநகரில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடமான பாளை பேருந்து நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் நெல்லையை சேர்ந்த 16 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு ஜூட்சன் பயிற்சி அளித்தார்.‌ குறிப்பாக கை சைகை மூலம் வாகனங்களை நிறுத்துவது எப்படி என்பது குறித்தும், சாலை விதியை மீறும் வாகன ஓட்டிகளை விசில் அடித்து எச்சரிப்பது எப்படி? என்பது குறித்தும், உயரதிகாரிகள் சாலையை கடக்கும்போது அவர்களுக்கு சல்யூட் அடித்து மரியாதை கொடுப்பது எப்படி போன்ற விஷயங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் சிறிது நேரம் மாணவர்கள் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதுபோன்று மாநகரம் முழுவதும் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் மாணவர்களை கொண்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *