தேனி ஏப்ரல், 15
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அமமுக போட்டியிடுகிறது. இந்நிலையில் தேனி பிரச்சார கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு டிடிவி தினகரன் வசம் அதிமுக செல்லும் என பேசினார். தற்போது அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் இபிஎஸ் வசமே அக்கட்சி அலுவலகங்கள் உள்ளன. அண்ணாமலை இவ்வாறு கூறியிருப்பதற்கு இபிஎஸ் என்ன பதிலடி கொடுப்பார்? என அறிய தமிழக மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.