சென்னை ஏப்ரல், 12
நடிகர் அருள்மணி (வயது 65) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அழகி, தென்றல், தாண்டவகோனே உள்ளிட்ட பல்வேறு படங்களில் திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல், அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.