சென்னை ஏப்ரல், 8
சென்னை-கொல்கத்தா இடையேயான 22 வது ஐபிஎல் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் அதிரடியாக வெற்றி பெற்ற சென்னை அணி, அடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். தோல்வியே பெறாத கொல்கத்தாவுடன் மோதுவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.