சேலம் ஏப்ரல், 6
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மனோஜ் குமார் மைக் சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களிடம் பரிசு பொருட்கள், பணத்தை வாங்கவேண்டாம். மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். வாக்களிக்கும் பெட்டியில் ஏழாவதாக உள்ள நமது ஒலிவாங்கி சின்னத்திற்கு வாக்களியுங்கள். உங்கள் வீட்டில் உள்ள இளைஞர்களிடம் தோனியின் நம்பர் 7 மறக்காமல் தோனியை ஞாபகம் வைத்து வாக்களியுங்கள் என்று கூறுங்கள் என பிரச்சாரம் செய்தார்.