சென்னை மார்ச், 31
கச்சத்தீவு இலங்கைக்கு 1974 இல் இந்திய அரசால் அளிக்கப்பட்ட தகவல்களை ஆர்டிஐ மூலம் அண்ணாமலை வாங்கியுள்ளார். அதில் 1974 ம் ஆண்டில் அப்போதைய இந்திரா காந்தி தலைமையிலான அரசு கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கைக்கு அளித்த தகவலை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. 1961 இல் கட்சத் தீவு மீதான உரிமையை இலங்கைக்கு அளிக்க தயங்க மாட்டேன் என நேரு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.