கோவை மார்ச், 31
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் டாப்சிலிங்க் பகுதிகளில் உள்ள கோழிக முத்து யானைகள் வளர்ப்பு முகாமில் சுமார் 25 யானைகள் உள்ளன.
அப்பகுதியில் கடும் வெயில் காரணமாக யானைகளுக்கு போதுமான நீர் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள மூன்று யானைகள் நேற்று வரகலியாறு வழியாக வால்பாறை அடுத்த மானாம்பள்ளி எஸ்டேட் பகுதிகளுக்கு அழைத்துவரப்பட்டன . டாப்சிலிங் பகுதிகள் போதிய தண்ணீர் கிடைக்காததால் இன்று முன் இந்த மூன்று யானைகள் மானாம்பள்ளி பகுதிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சில நாட்களில் இங்கு அமைக்கப்பட்டுள்ள முகாமில் மூன்று யானைகளும் இருக்கும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.