புதுடெல்லி மார்ச், 26
மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காண பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். மாணவர்கள் இன்று இரவு 11.50 வரை விண்ணப்பிக்கலாம். மத்திய பல்கலைக்கழகங்கள், அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர CUET பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேர்வு மே 15 முதல் 31 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு exams.nta.ac.in என்ற இணையதளத்தை காணலாம்.