சென்னை மார்ச், 21
மக்களவைத் தேர்தல் 2024-ற்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஐந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை வடக்கு ராயபுரம்-மனோ, சென்னை தெற்கு -ஜெயவர்த்தன்,
காஞ்சிபுரம்-ராஜசேகர், அரக்கோணம்-விஜயன், கிருஷ்ணகிரி-ஜெயப்பிரகாஷ்,
ஆரணி-கஜேந்திரன், சேலம்-விக்னேஷ், தேனி-நாராயணசாமி, விழுப்புரம்-பாக்யராஜ்,
நாமக்கல்-தமிழ்மணி, ஈரோடு-ஆற்றல் அசோக்குமார், கரூர்-தங்கவேல்,
சிதம்பரம்-சந்திரகாசன், நாகப்பட்டினம்-சுஜித் சங்கர்,
மதுரை-சரவணன், ராமநாதபுரம்-ஜெயப் பெருமாள்.
அதிமுகவை எஸ் டி பி ஐ, புதிய தமிழகம், புரட்சி பாரதம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் கதிரவன் பிரிவினர் மட்டுமே தற்போது ஆதரித்து வருகின்றனர். இவர்களும் தங்களுக்கு தொகுதியை ஒதுக்க கேட்டு வருகின்றனர். இதற்கு இடையில் பாமக உடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் அவ்வப்போது பேசி வந்தனர். ஆனால் மக்களவை, மாநிலங்களவை தொகுதிகளில் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில் பாமக, பாஜகவுடன் இணைந்து 10 தொகுதிகளை பெற்று கூட்டணியை உறுதி செய்து விட்டது. தற்போது தேமுதிகவிடம் தொடர்ந்து அதிமுக பேசி வருகிறது. அதன்படி தற்போது மேற்க்கண்ட 16 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை இபிஎஸ் வெளியிட்டுள்ளார்.