கேரளா மார்ச், 19
கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். முதலமைச்சர் கருணாகரனின் மகள் பத்மஜா, காங்கிரஸ் கட்சியின் மீதான அதிருப்தியில் பாஜகவில் இணைந்துள்ளார். அதேபோல் காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் தம்பனூர் சதீஷ், பத்மினி தாமஸ் மற்றும் தேவிகுளம் தொகுதி சிபிஎம் எக்ஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் தங்களது கட்சியிலிருந்து விலகி உள்ளனர்.