சென்னை மார்ச், 4
தமிழகத்தில் இன்று முதல் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. இத்தேர்வினை 7,534 பள்ளிகளில் இருந்து சுமார் 8,20,000 மாணவர்கள் எழுதுகின்றனர். இது தவிர 50,000 தனி தேர்வர்களும், 187 சிறைவாசிகளும் தேர்வு எழுத உள்ளனர். சுமார் 3,300 தேர்வு மையங்களில் மார்ச் 25ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. காலை 10 மணி முதல் மதியம் 1:15 வரை தேர்வு நடைபெறும்.