சென்னை பிப், 16
பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியானால் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் வருமா என கேள்வி எழுந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை எந்த வகையிலும் தேர்வுகளை பாதிக்காது என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. தேர்வுகளை நடத்துவது, பதவி உயர்வு வழங்குவது போன்ற தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளின் எந்த பணிகளும் இதனால் பாதிக்காது என்று கூறப்பட்டுள்ளது.