சென்னை பிப், 15
சிம்பு, வெற்றிமாறன் ஆகிய இருவர் கூட்டணி விரைவில் இணையும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். வடசென்னை படத்திற்கு தனுஷின் கால் சீட் உடனே கிடைக்காததால் சிம்புவை வைத்து அந்த படத்தை வெற்றிமாறன் இயக்கவிருந்தார். ஆனால் சில காரணத்தால் இந்த கூட்டணி இணைய முடியாமல் போனது. இந்த கூட்டணி இணைந்தால் படம் தாறுமாறாக இருக்கும் என்றார்.