தர்மபுரி ஆகஸ்ட், 25
அதிமுக. 50வது ஆண்டு பொன்விழாவையொட்டி அரூர் பழையபேட்டையில் கட்சி கொடி ஏற்று விழா நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் சம்பத்குமார் தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் அறிவழகன், பாபு, நிர்வாகிகள் செண்பகம் சந்தோஷ், சிவன், கலைவாணன், வேலு, ஜம்பு, ஆறுமுகம், கோபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.